"ஓவச் செய்தியின் ஒன்றுநினைந்து ஒற்றி " - அகநா. 5
என்பது குறிப்புநிலை; என்னை? தலைமகன் போக்கினை உவக்கும் குறிப்பு அல்லாத குறிப்பு ஆகலின் அஃது அணியெனப்படும்.
"தும்முச் செறுப்ப அமுதாள் " - கு. 1318
என்பது புலவியுள் அழுத மங்கலம்.
"பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூநீர் பயந்த துணைஅமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை " - அகநா. 5
என்பது போக்கின்கண் அழாத மங்கலநிலை.
"விளிநிலை கேளாள் தமியள் மென்மெல
நலம்மிகு சேவடி நிலமிசை வடுக்கொளாஅக்
குறுக வந்து கூர்எயிறு தோன்ற " - அகநா. 5
என்பது, அறிவொடு படாது புலம்பு கொள வந்த செய்வினை; என்னை? கேளாது கேட்டாள்போல வந்தமையின். அதுவும் அலங்காரம் என்று சூத்திரம் செய்துகொள்ள வேண்டும், செய்யுட்கு அணிவேறு கூறின் என்பது.
இனி, இங்ஙனம் கூறின எல்லாம் குற்றம் என்று கொள்ளப் படா; என்னை? பொருளதிகார முறை பெறாது பிறழ்ந்து இடை யறவுபட்ட காலை இடர்ப்பட்டுச் செய்தன ஆகலான் அவையும் அவ்வாற்றான் அமையும் என்பது "
இக் கூற்றான் அணி இலக்கணத்தையே ஒத்துக்கொள்ளாத பேராசிரியர் ஒருவாற்றான் காலத்தை ஒட்டி அதுவும் தேவைப் பட்டதே என்று அமைதிகோடல் உணரப்படும்.] |
|
|