மாற்று என்றாற்போல்வன. இவை மந்திரவகையான் அன்றி வாளாது மக்களைச் செய்யுள்செய்வார்க்கு அகன் ஐந்திணைக்கும் மரபு அன்று என்பது கருத்து. அல்லாதார் இவைஎல்லார்க்கும் செய்தற்கு உரியன என இழியக் கருதி அன்னவகையான் வேறுசிலபெய்துகொண்டு அவற்றிற்கும் இலக்கணம் சொல்லுப. அவை இத்துணை என்றுவரையறுக்கலாகா; என்னை? ஒற்றை, இரட்டை, புத்தி, வித்தாரம் என்றாற்போல்வன பலவும்கட்டிக் கொண்டு அவற்றானே செய்யுள் செய்யினும் கடியலாகாமையின், அவற்றிற்குவரையறை வகையான் இலக்கணம் கூறலாகா என்பது.
"ஐயைதன் கையுள் இரண்டுஒழித்துஎன் ஐம்பால்மேல்
பெய்தார் பிரிவுஉரைத்தல் இல்லையால்"
"கோடாப் புகழ்மாறன் கூடல் அனையாளை
ஆடா அடகினுளும் காணேன்" - திணை. நூற். 4
எனவும் சொல்லுவார் சொல்லுவனவற்றுக்கெல்லாம் வரையறை இன்மையின் அவற்றுக்குஇலக்கணம் கூறார் பண்ணத்திப்பாற் படுப்பினல்லது, என்பது.
685. எழுத்தின் கூட்டம் இடைபிறிது இன்றிப்
பெயர்த்தும்ஒரு பொருள்தரின் மடக்குஎனும் பெயர்த்து,அஃது
ஓர்அடி முதலா நான்குஅடி காறும்
சேரும் என்ப தெளிந்திசி னோரே.
இது மேற்கூறிய இருவகைப்பகுதியுள் மடக்கினது பொது இயல்பும் அதன்வகையும் கூறுகின்றது.
|
|
|