பக்கம் எண் :

 அணியியல் - சொல்லணி - மடக்கு

341 

     ஈற்றுஅடி ஒழித்து ஏனை மூன்று அடியும், இரண்டாம் அடி ஒழித்து ஏனை
 மூன்று அடியும், முன்றாம்அடி ஒழித்து ஏனைமூன்று அடியும், முதல்அடி ஒழித்து
 ஏனை மூன்று அடியும் மடக்கிவரும் மூவடிமடக்கு நான்கும்,

     நான்குஅடியும் மடக்கிவரும் முற்றுமடக்கு ஒன்றும் என வருதாலம்.

     நாற்சீர்அடியுள் ஓதுவதனை நான்குஅடிச் செய்யுட்-கண் ஓதினார்,
 "ஒப்பின்முடித்தல்" என்பதனான். எனவே, இங்ஙனம் கூறிய மூவகையாகிய மடக்குப்
 பதினொன்றும் மேற்கூறிய ஓரடிமடக்கு நான்கும் ஆகிய பதினைந்தும், ஆதி இடை
 கடை முதலியவற்றோடு கூட்டி உறழ நூற்றைந்து வகைப்படும். அவையே இடையிடாது
 வருவனவும் இடையிட்டு வருவனவும், இடையிட்டும் இடையிடாதும் வருவனவும் என்று
 கூறப்படும் மூன்று வகையோடும் கூட்டி உறழ, முந்நூற்று ஒருபத்தைந்து வகையவாம்.
 ஆகவே, மடக்குஎனத் தொகையான் ஒன்றும், அடியான் வகை நான்கும், அவற்றின்
 பகுதி யாகிய விரியான் மடக்கு முந்நூற்று ஒருபத்தைந்துமாம் என உய்த்துணர்க.

விளக்கம்

     [இருசீர்த் தொடை ஆறு :

     1, 2  -  இணை.
     1, 3  -  பொழிப்பு.
     1, 4  -  ஒரூஉ.
     3, 4  -  கடையிணை.
     2, 4  -  பின்.
     2, 3  -  இடைப்புணர்.