முச்சீர்த் தொடை நான்கு :
1, 2, 3 - கூழை
1, 3, 4 - மேற்கதுவாய்
1 , 2, 4 - கீழ்க்கதுவாய்
2 , 3, 4 - கடைக்கூழை
நாற்சீர்த்தொடை ஒன்று - முற்று
ஈரடி மடக்கு ஆறு :
1, 2 - 1, 3 - 1, 4 - 2, 3 - 2, 4 - 3, 4.
மூவடி மடக்கு நான்கு :
1, 2, 3, - 1, 2, 4 - 1, 3, 4 - 2, 3, 4.
நான்கடி மடக்கு ஒன்று :
1, 2, 3, 4 - ஆகிய முற்று மடக்கு.
ஒரடி மடக்கு 4, ஈரடி மடக்கு 6, மூவடி மடக்கு 4, நான்கடி மடக்கு 1 ஆக 15. இவற்றை ஆதி, இடை, கடை, ஆதியோடு இடை, ஆதியோடு கடை, இடையோடு கடை, முழுதும் - என்ற ஏழால் பெருக்க - 15x7 = 105 ஆகும். இவற்றை இடையிட்டு வருவன, இடையிடாது வருவன, இடையிட்டும் இடையிடாதும் வருவன - என்ற மூன்றால் பெருக்க 105x7 = 315 ஆகும். இவை இலக்கண அளவினவே யன்றி இவற்றிற்கெல்லாம் உதாரணம் காண்டல் அரிது.
ஒப்பின் முடித்தல் - ஒன்றற்குச் சொல்லும் இலக்கணம் பிறிது ஒன்றற்கும் பொருந்துமாயின் அதற்கும் அதனையே இலக்கணமாகக் கொண்டு கூறுதல். தொடைக்கு ஓதப்படும் இலக்கணம் மடக்கிற்கும் கொள்ளப்பட்டடுள்ளது.
|
|
|