‘வல்லினம் மெல்லினம் இடையினப் பாட்டே
நிரோட்டிய ஓட்டியம் ஓட்டிய நிரோட்டியம்
அக்கரச் சுதகம் அதன்வருத் தனையே
வக்கிர உத்தி வினாவுத் தரமே
சக்கர பெந்தம் பதும பெந்தம்
முரச பெந்தம் நாக பெந்தம்
இரத பெந்தம் மாலை மாற்றே
கரந்துறை செய்யுள் காதை கரப்பே
பிரிந்தெதிர் செய்யுள் பிறிதுபடு பாட்டே
சருப்பதோ பத்திரம் கூட சதுர்த்தம்
கோமூத் திரிசுழி குளம்திரி பங்கி
எழுகூற் றிருக்கையோ டிருபா னாலும்
பழிதீர் மடக்குடைச் சித்திரப் பாவே.’ - மா. 270
‘அவற்றுள்,
இதழ்குவிந் தியையா தியல்வது நிரோட்டியம்.’ - ” 274
‘இதழ்குவிந் தியைந்தியல் வதுவே ஓட்டியம்.’ - ” 275
‘இருமையும் ஒன்றினுள் இருவகைத் தாயுறும்
பெருமிதம் ஓட்டிய நிரோட்டியம் எனப்பெறும்.’ - ” 276
‘சித்திர கவியே தீட்டிய படவடிவு
அத்திறத்து அனைத்தையும் ஐஎன வகுத்தலே.’ - தொ. வி. 364