என வரும். இதனை உச்சரித்து அவ்வாறாதல் காண்க.
[காஞ்சிமா நகரில் திருக்கச்சாலையிலுள்ள கனிபோன்ற சிவபெருமான்
ஒழுக்கத்தாலும், ஞானத்தாலும், மனத் தெளிவாலும், பல காலமாக வழிபடுதலாலும்,
நீங்காத பக்தியினாலும் சான்றோர் தன்னை நினைப்பவனாக இருந்தும் ஒன்றுமில்லாத
அடியவனாகிய எனக்கும் மிகவும் மனத்தில் வந்து பொருந்தி இன்பம் தருகிறான்.
உதடுகள் தொடர்புறத் தோன்றும் எழுத்தொலிகளாகிய உ ஊ ஒ ஓள ப ம வ --
என்பன இப்பாடலில் வாராமை காண்க.]
தன்னிடம் முடித்தல் என்பதனால், சதுரங்க விகற்பமும் தேர்க்கவி
கடகபந்தம் முதலாயவற்றின் வேறுபாடும் கொள்க. (மாறனலங்காரத்துள் காண்க.) (71)
691. பிரிபொருள் சொற்றொடர்1 மாறுபடுபொருள்மொழி2
மொழிந்தது மொழிவே3 கவர்படு பொருள்மொழி4
நிரல்நிறை வழுவே5 சொல்வழு6 யதிவழு7
செய்யுள் வழுவே8 சந்தி வழு9 என
எய்திய ஒன்பதோடு இடனே10 காலம்11
கலையே12 உலகம்13 நியாயம்14 ஆகமம்15
எனமலைவு இருமூன்றும் வரைந்தனர் புலவர்.