[பொதியமலையின் கத்தூரியும் சாமரையும், தெய்வம் மருவும் சிறப்பினை உடைய
மேருமலையிலுள்ள சந்தனமும் பூமாலையும், பலகாலும் அரசர்கள் கப்பப் பொருளாகத்
தருகையினாலே, அவை சோழமன்னன் அரண்மனையின் முன்னிடத்தில் குவிந்து
கிடக்கும் என்ற இப்பாடலில்,
பொதியிலில் சந்தனமும் பூமாலையும், மேருமலையில் கத்தூரியும் சாமரையும்
பெற்ப்படுதலை மாற்றிக் கூறியது மலை இடமலைவாம்.
பொறுநையாற்றிலுள்ள செம்பொன், மாதங்கிரி என்ற ஆற்றிலுள்ள முத்து,
கலிங்கநாட்டிலிருந்து வந்த வலிமையுடைய குதிரை, யவனநாட்டிலிருந்து வந்த பெரிய
யானை இவைகளே சோழன் தன்னைப் புகழ்ந்து பாடும் பொருநருக்கு வாரிவழங்கம்
பொருள்களாம் - என்ற பாடலில்,
பொருநையாற்றில் பெறப்படும் முத்து, மாதங்கிரியில் பெறப்படும் தங்கம்,
கலிங்கத்து யானை, யவனநாட்டுக் குதிரை என்பனவற்றை மாற்றிக் கூறியமை யாற்று
இடமலைவும், நாட்டு இடமலைவும் ஆம்.] 83