438
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
விளக்கம்
அணியியலுள் கூறப்படுவன :
1. முத்தகம் முதலிய செய்யுள்திறன்
2. வைதருப்பம் கௌடம் என்ற இருவகை நெறி
3. செறிவு முதலிய பத்துக்குணம்
4. தன்மை முதலிய முப்பத்தைந்து பொருளணிகள்
5. மூவகை மடக்குக்கள்
6. கோமூத்திரி முதலிய இருபது மிறைக்கவிகள்
7. வழுக்களும் அவற்றின் அமைதிகளும்
8. மலைவுகளும் அவற்றின் அமைதிகளும் - என்பன.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் (சிறிது திரிபுடன்) - தண்டி 126.
"சொல்லணி ஆறைந்தும் பொருளணி ஐயாறும் புல்லணி இருவகை புணர்ந்த தொகையென முத்தமிழ்க்கு இவையெல்லாம் முகம்முறை சிகைபொறை அத்தகைத் தாகா அணிகல னாக்கொண்டு எந்நூற்கும் முதலாம் யுத்தியஃது இல்லால் அந்நூல் பித்தனகங் கைவாள் என்ப." - தொ. வி. 369
90
*
மூன்றாவது அணியியல் முற்றும்.