"பேசுங்காலை" என்றதனால், வாழ்த்து முதலிய மூன்றனுள் ஒன்றே அன்றி
இரண்டும் மூன்றும் ஒருங்கு வரினும் இழுக்கு இன்று என்பது. "இனையன புனைந்து"
என்றதனால், வனமும் நதியும் இருசுடர்த் தோற்றமே அன்றி, அவற்றின் அத்தமனம்
முதலியன புனைதலும் கொள்க.
சந்தி என்பது நாடகத்தின் கண்ணது ஓர் உறுப்பு. அஃதாவது வித்தல் விளைத்தல்
விளைவு துய்த்தல் என்பதாம். (9)