பக்கம் எண் :

 அணியியல் - குணவணி

53 

     குறிப்பின் ஒருபொருள் நெறிப்படத் தோன்றும்
     சிறப்புஉடை மரபின் உதாரத் தானும்
     கருதிய பொருளைத் தெரிவுஉற விரித்தற்கு
     உரியசொல் உடைய உய்த்தலில் பொருண்மையும்
     உலகுஒழுக்கு இறவா உயர்புகழ்க் காந்தமும்
     தொகைமிக வரூஉம் தகைமிகு வலியும்
     உரியபொருள் அன்றி ஒப்புஉடைப் பொருள்மேல்
     தருவினை புணர்க்கும் சமாதியும் எனமுறை
     ஆய்ந்தவை தருப்பம் ஐஇரு வகைத்தே.

 இது மேல் கூறிய வைதருப்பம் இவ்வியல்பான் இத்துணைத்து என்கின்றது.

     இ-ள் :   நெகிழ்இசை இல்லாச் செறிவு முதலாகச் சமாதி ஈறாக முறையே
 ஆராய்ந்த வைதருப்பம் பத்துக் கூற்றினை உடைத்தாம் என்றவாறு.

(15) 

விளக்கம்

     செறிவு - ஒன்றனை ஒன்று இறுகத்தழுவுவது; பெரும்பாலும் செய்யுளில் வல்லினம்
 ஒற்று அடுத்தும் அடாதும் வருதலும் நெடில் வருதலும் செறிவுக்குக் காரணமாம்
 என்பர். மெல்லினம் செறிதல் வைதருப்பச்செறிவு என்றும் வல்லினம் செறிதல்
 கௌடச் செறிவு என்றும் இடையினம் செறிதல் பாஞ்சாலச் செறிவு என்றும்
 மாறன் அலங்காரம் கூறும். தெளிவு - பொருள் எளிதில் புலனாகுமாறு
 செய்யுளை அமைத்தல். சமனிலை-வன்மை மென்மை இடைமையாகிய மூவகை
 எழுத்துக்களும் சமமாக உறப்பாடுவது.

     சொல்லின்பமாவது அடைசினை முதல் என முறை மூன்றும் மயங்காமை வரும்
 வண்ணச் சினைச்சொற்களும் முதலொடு குணம் இரண்டு அடுக்கி வரும் அடைச்
 சொற்களும் சினையொடு குணம் இரண்டு அடுக்கிவரும் அடைச்சொற்களும் முறையே
 வழக்கிடமும் செய்யுளிடமுமாக, இரண்டு இறந்தனவாய் அடை பல வேண்டின