பக்கம் எண் :

 6

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     வீரியம் என்ற ஐந்திலக்கண நூலின் இறுதியதிகாரமாகிய அணியதிகாரம்,
 சொல்லணியியல் பொருளணியியல் செய்யுளணியியல் என்ற மூன்று இயல்களை
 உடையதாய்,160 நூற்பாக்களைக் கொண்டு விளங்குகிறது. இவரும் மடக்கணியை
 "மறிநிலை" என்றே குறிப்பிடுகிறார். மடக்கணியை விளக்கிய பின்னர், காதைகரப்பு
 முதலாகப் பிறிதுபடுபாட்டு ஈறாகச் சித்திரகவியின் பதின்மூன்று வகைகள்
 விளக்கப்பட்டுள்ளன. முதலில் சொல்லணியியலில் தொடங்கும் இவ்வணியதிகாரம்,
 பொருளணியியலில் தண்டியலங்காரம் குறிப்பிடும் பொருளணிகள் பலவற்றோடு வேறு
 சிலவற்றையும் சேர்த்து 56 பொருளணிகளைக் குறிப்பிடுகிறது. செய்யுளணியியலில்
 வைதருப்பர் கௌடர் கூறும் பத்து நெறிகளும் எண்வகைப் பொருள்கோள்களும்
 வழுக்களும் மலைவுகளும் அமைதிகளும் கூறப்படுகின்றன.

      இலக்கண விளக்கம் குறிப்பிடாத ஏனைய பொருளணி சொல்லணிகளை,
 மாறன் அலங்காரம், தொன்னூல் விளக்கம், அணியிலக்கணம், சந்திராலோகம்,
 குவலயானந்தம்,முத்துவீரியம் இவற்றின் அடிப்படையில் விளக்கிப் பிற்சேர்க்கையாக
 இணைத்துள்ளனம். அணியிலக்கணம் பற்றிய விளக்கம் நிரம்ப, அவையும்
 இன்றியமையாதன என்னும் கருத்தினேம்.

பொருளணி வகைகள்

      தண்டியலங்காரம் குறிப்பிடும் 35 பொருளணிகளையே இலக்கண விளக்கமும்
 குறிப்பிடுகிறது. அவையாவன :

        அணியின் பெயர் - பரியாயப் பெயர்:

  1. தன்மையணி - ஸ்வபாவோக்தி அலங்காரம்
  2. உவமையணி - உபமாலங்காரம்
  3. உருவக அணி - ரூபகாலங்காரம்
  4. தீவக அணி - விளக்கு அணி
  5. பின்வருநிலையணி - ஆவர்த்திதீபகாலங்காரம்
  6. முன்னவிலக்கணி - தடைமொழி. பிரதிஷேதாலங்காரம்
  7. வேற்றுப்பொருள்வைப்பணி - பிறபொருள்வைப்பணி.

     அர்த்தாந்த நியாஸாலங்காரம்