[பொருளையே அடிப்படையாக் கொண்டு பெயரிடப்படும் அணிகள்
 பொருளணிகளாம். அவையே மிக மேம்பட்டன என்ப. சொற்களின் அமைப்புக்கே
 சிறப்பிடம் கொடுத்துப் பொருளமைப்பைப் பற்றிப் பெரிதும் கவலாது அமைவன
 சொல்லணிகளாம். சொல்லணிகள் பொருளணிகளை ஒத்த சிறப்பின அல்ல. 
 சந்திராலோகம், குவலயானந்தம் என்பன பொருளணிகளையே புகல்வன. 
 தண்டியலங்காரம், வீரசோழியம், மாறன்அலங்காரம் என்பன பொருணிகளை 
 முன்னும் சொல்லணிகளைப் பின்னும் குறிப்பிடும். தொன்னூல் விளக்கமும் 
 முத்துவீரியமும் சொல்லணியை முன்னும் பொருளணியைப் பின்னும் குறிப்பிடும்.]
ஒத்த நூற்பா
     "பொருளினும் சொல்லினும் புனையுறு செய்யுட்கு
      அணிபெறப் புணர்த்தலின் அணிஎனும் பெயர்த்தே".