பக்கம் எண் :

 அணியியல் - உவமையணி்

87 

 "இலையால் மறைக்கப்பட்ட தாமரை மொட்டுப்போலக் குடை நிழலில் வரும்
 புதல்வன் காணப்படுகிறான்" என்ற தொடரில் இலை குடைக்கும், தாமரைப்போது
 சிறுவனுக்கும் தனித்தனி உவமை ஆதலே அன்றி, இலைமறை போது குடைமறை
 சிறுவனுக்கு ஒருங்கு வந்து உவமையாதலும் காண்க.

     தேனில்உள்ள நா இனிமை, மொழியிலுள்ள செவிஇனிமைக்கு உவமை.

     குன்றியின் செந்நிறம் புறத்தில் காணப்படும் நேர்மைக்கு உவமை; குன்றி மூக்கின்
 கருமை அகத்துக் காணப்படும் வஞ்சனைக்கு உவமை.

     குயிலின் கரு நிறத்துக்கு நற்செயல்களில் ஈடுபாடின்றி உணவு உண்பதிலேயே
 கருத்தைச் செலவிட்டு வாழ்நாளைக் கடத்தச் செய்யும் இருண்ட மனம் உவமையாகும்.]

    "செவ்வான் அன்ன மேனி"                    - அகநா. கடவுள் வாழ்த்து 

 என ஒருபொருளோடு ஒருபொருளும்,

    "அவ்வான்
     இலங்குபிறை அன்ன விலங்குவால் வைஎயிறு"   - அகநா. கடவுள் வாழ்த்து

 என ஒருபொருளோடு ஒருபொருளும்,

    "அவ்வான்
     இலங்குபிறை அன்ன விலங்குவால் வைஎயிறு"   - அகநா. கடவுள் வாழ்த்து 

 என ஒருபொருளோடு பலபொருளும்,

    "சுறவுஇனத் தன்ன வாளோர் மொய்ப்ப"                     - புறநா. 13 

 எனப் பல பொருளோடு பலபொருளும்,

    "பெரும்பெயர்க் கரிகால் முன்னிலை செல்லாப்
     பீடுஇல் மன்னர் போல
     ஓடுவை மன்னால் வாடைநீ எமக்கே"                     - அகநா. 125 

 எனப் பலபொருளோடு ஒரு பொருளும் இயைய வைத்தலாம் என்று உணர்க.