அணியின் பெயர் - பரியாயப் பெயர்
61. உறுசுவை அணி - ஒப்புமை ஏற்ற அணி
62. விநோத்தி - இன்மை நவிற்சியணி
63. சமுச்சயம் - கூட்டவணி
64. சங்கரம் என்பன. தூரகாரிய ஏது - அசங்கதி எனவும், நுட்பம் - பரிகரம் எனவும்
பெயரிடப்பட்டுள்ளன. இவற்றுள் அற்புதம், பூட்டுவில், இறைச்சி, பொருள்மொழி,
வகைமுதல் அடுக்கு, உபாயம்,தற்பவம், காரியமாலை, பிறவணியின் கூறு என்ற
ஒன்பதும் சந்திராலோகம், குவலயானந்தம் என்பனவற்றிலும் இடம் பெறாதன.
பொருளணியில் முப்பதனையே குறிப்பிடும் தொன்னூல் விளக்கத்துள் பிறிது
உரை,விடையில் வினா, வினா இல்விடை, அமைவு அணி என்ற நான்கும்,
தண்டியலங்காரம் கூறுவனவான ஏனையவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சந்திராலோகம் அணியிலக்கணம் என்பனவற்றில், தண்டியலங்காரமும் மாறன்
அலங்காரமும் கூறும் அணிகளின் வகைகளில் சில வேறு பெயரவாய்த் தனி
அணிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. அந் நூல்களில் காணப்படும் பெரும்பான்மையவான
அணிகளோடு, திரிபு அணி, நினைப்பணி, மயக்கவணி, தொடர்முழுதுவமையணி,
உடன்நிகழ்ச்சியணி,சுருங்கச்சொல்லணி, கருத்துடை அடை கொளி அணி, புனைவிலி
புகழ்ச்சியணி, புனைவுளி விளைவணி, பிறிதின் நவிற்சியணி, எதிர்மறையணி, முரண்
விளைந்து அழிவணி, பிறிதாராய்ச்சியணி, காரண ஆராய்சியணி, கூடாமையணி,
தகுதியின்மையிணி, தகுதியணி, வியப்பணி, சிறுமையணி, ஒன்றற்கொன்று உதவியணி,
மற்றதற்காக்கல் அணி, மேல்மேல் உயர்ச்சியணி, முறையில் படர்ச்சியணி,
ஒழித்துக்காட்டணி, உறழ்ச்சியணி, எளிதின் முடிப்பணி, தொடர்நிலைச்செய்யுட்
பொருட்பேறணி, மலர்ச்சியணி, கற்றோர் நவிற்சியணி, உய்த்துணர்வணி,
பொய்த்தற்குறிப்பணி, வனப்பு நிலையணி, அகமலர்ச்சியணி, இகழ்ச்சியணி,
வேண்டலணி, குறிநிலையணி, அரதனமாலையணி, தொல்லுருப் பெறலணி, பிறிதின்
குணம் பெறாமையணி, தன்குணமிகையணி, மறைவணி, பொதுமையணி,
மறையாமையணி, இறையணி, கரவு