ஒருவன் கண் போலச் சிறந்தான் - என்ற தொடரில் காதல் பற்றி உவமை
கூறப்பட்டது. காதலாவது சிறப்பும் நலனும் இல்வழியும் இட்டுரைப்பதாம்.
சிங்கத்தைப் போன்று பகைவருக்குத் துன்பம் தரும் வலிமையினை உடைய
திருமாவளவன் - என்ற தொடரில் வலிமை பற்றி உவமை கூறப்பட்டது.
பாம்பால் மறைக்கப்பட்ட சந்திரனைப் போலப் பசலையான் நெற்றி ஒளி
மறைக்கப்பட்டது என்ற தொடரில் - பொலிவிழந்த நெற்றிக்குப் பாம்பினால் ஒளி
இழந்த மதியான கீழ்ப்படுக்கப்பட்ட பொருள் உவமையாயிற்று.
பண்பு தொழில் பயன் என்ற மூவகை உவமையும் தோன்றுவதற்குச் சிறப்பு நலன்
காதல் வலி கிழக்கிடுபொருள் என்ற ஐந்தும் நிலைக்களமாகும் என்பதாம்.]
"உய்த்துணர்வகைத்து" எனப்பட்ட உவமப்போலி ஆகிய உள்ளுறைஉவமமும்
ஈண்டே வெளிப்படை