10 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | பொருள் நோக்காது ஓசையே நோக்கிக்கொள்ளப்படும் வகையுளி பின் குறிப்பிடப்பட்டுள்ளது. உரையில் எடுத்துக்காட்டுக்கள் தந்து விளக்கப்பட்டுள்ளன. பின் மெய்வாழ்த்தும் இருபுறவாழ்த்தும் எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கப்பட்டுள்ளன; வசையின் வகைகளும் அங்ஙனமே விளக்கப்பட்டுள்ளன. பின் அம்மை முதலிய எண்வகை வனப்புக்களும் எடுத்துக்காட்டுக்களுடன் விளக்கப்பட்டுள்ளன. அடுத்து எழுத்து அல் இசையும் அசையாகவும், சீராகவும் ஆமாறு குறிப்பிசை என்பது எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டுள்ளது. ஒப்பு எனப்படும் பாக்களின் போலி உதாரணங்காட்டி விளக்கப்பட்டுள்ளது. பின் புனைந்துரையின் வகையாகிய சுருக்க பெருக்கங்கள் விளக்கப்பட்டுள்ளன. அடுத்து, வண்ணங்கள் இருபதும் விளக்கப்பட்டுள்ளன. இறுதியில் ஆனந்தம் என்ற குற்றங்களின் பகுதியின் விளக்கங்களோடும், அடிவரையறையில்லாத உரை, நூல், மந்திரம், பிசி, முதுசொல், அங்கதம், வாழ்த்து என்பனவற்றின் குறிப்போடும் செய்யுளியல் முடிக்கப் பெற்றுள்ளது. | | |
|
|