பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 18, 19

101

 
 

முழுதும் - யா. வி. 55

 

 

`வெண்பாத் தாழிசை வெண்டுறை விருத்தம்என்று
இந்நான்கு; அல்லவும் முந்நான்கு என்ப.'
 
 

- அவிநயம்

 

 

`ஒத்தா ழிசை, துறை, விருத்தம், எனப்பெயர்
வைத்தார் பாவினம் என்ன வகுத்தே.'
 
 

- மயேச்சுரம்

 

 

`விருத்தம் வியன்துறை தாழிசை என்று
பொருத்து முறைமை மறுத்தல்; - விரித்துச்
சிறுகாக்கை பாடினியார் செய்த முறையே
மறுகாக்கை வைத்தார் வகுத்து.'
`துறைதா ழிசைவிருத்தம் தூக்கன மூன்றே.'
 
 

- தொ. வி. 219

18

வெண்பாவின் பொது இலக்கணம்

728.

செப்பல் இசையன வெண்பா; மற்றவை
அந்தடி சிந்தடி ஆகலும், அவ்வடி
அந்தம் அசைச்சீர் ஆகவும், பெறுமே.
 
 

- தொ. வி. 219

 
இது நிறுத்தமுறையானே வெண்பா ஆமாறு பொது வகையான் உணர்த்துகின்றது.

     இ-ள் : செப்பல் ஓசையைத் தமக்கு ஓசையாக உடையனவாம், எல்லா
வெண்பாவும்; அவ்வெண்பாக்களின் ஈற்றடி முச்சீர் ஆதலும், அவ்வீற்றடியின் இறுதி
அசைச்சீரான் இறுதலும் பெறும் என்றவாறு.
 
  `பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்'
 
 

 - குறள் 1121

 
என நேர்அசைச் சீரானும்,
  `நன்றறி வாரின் கயவர் திருவுடையர்
நெஞ்சத் (து) அவலம் இலர்'
 
 

- குறள் 1072

 
என நிரைஅசைச் சீரானும் இறுதலே அன்றி உம்மையால்,