பக்கம் எண் :

102

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்புழு
 
 

- குறள் 984

 
எனக் குற்றுகர ஈற்று நேர்பு அசைச்சீரான் இறுதலும்,

 

`அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகுழு
 
 

- குறள் 1

 
எனக் குற்றுகர ஈற்று நிரைபு அசைச்சீரான் இறுதலும்,

 

`இனமலர்க் கோதாய் இலங்குநீர்ச் சேர்ப்பன்
புனைமலர்த் தாரகலம் புல்லுழு
 
 

- யா. கா. 26 மே

 
என முற்றுகர ஈற்று நேர்நேர் இயற்சீரான் இறுதலும்,

 

`மஞ்சுசூழ் சோலை மலைநாட மூத்தாலும்
அஞ்சொல் மடவார்க்(கு) அருளுழு
 
 

- யா. கா. 26 மே

 
என முற்றுகர ஈற்று நிரைநேர் இயற்சீரான் இறுதலும் கொள்க.
     `மற்றுழு என்ற மிகையானே, ஏந்திசைச் செப்பலும் தூங்கிசைச் செப்பலும்,
ஒழுகிசைச் செப்பலும் எனச் செப்பல் ஓசை மூன்று வகைப்படும்;

 

`வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை
ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர்ழு
 
     
எனவும்,

 

`இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத்
தூங்கிசைச் செப்பல் என்மனார் புலவர்ழு
 
     
எனவும்,

 

`வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும்
ஒன்றிய பாட்டே ஒழுகிசைச் செப்பல்ழு
 
     
எனவும் கூறுப ஆகலின்.

     இவற்றிற்குச் செய்யுள்:

 

`யாதானும் நாடாமால்; ஊராமால்; என்ஒருவன்?
சாந்துணையும் கல்லாத ஆறுழு
 
 

- குறள் 397
- ஏந்திசைச் செப்பல்

 
எனவும்.