பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 21

109

 

ஒரு விகற்பத்தான் வந்த நேரிசை வெண்பாவிற்குச் செய்யுள்:

 

`அரிய வரைகீண்டு காட்டுவார் யாரே!
பெரியவரை வயிரம் கொண்டு; - தெரியின்,
கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வர்?
பெரிய வரைவயிரம் கொண்டு'
 
 

- யா. கா. 24 மே

 
எனவும்,

ஈரசையான் ஆசுஇட்டு இரு விகற்பத்தான் வந்த ஆசிடை நேரிசை
வெண்பாவிற்குச் செய்யுள் :

 

`தாமரையின் தாதாடித் தண்டுவலைச் சேறளைந்து,
தாமரையின் நாற்றமே தான்நாறும்; - தாமரைபோல்
கண்ணான், முகத்தான், கரதலத்தான், சேவடி,எம்
கண்ஆர்வம் செய்யும் கருத்து'
 
 

- யா. கா. 24 மே.

 

 [நாறும் என்பது ஆசு]

எனவும்,

ஓர் அசையான் ஆசுஇட்டு இரு விகற்பத்தான் வந்த ஆசிடை நேரிசை
வெண்பாவிற்குச் செய்யுள் :

 

`கருமமும் உள்படா, பேசகமும் துவ்வா,
தருமமும் தக்கார்க்கே செய்யா, - ஒருநிலையே
முட்டின்று மூன்றும் முடியுமேல், அஃதென்ப;
பட்டினம் பெற்ற கலம்'
 
 

- யா. கா. 24 மே; நாலடி 250

 

 [செய்யா என்பதிலுள்ள யா என்பது ஆசு]

எனவும்,

ஈரசையான் ஆசுஇட்டு ஒரு விகற்பத்தான் வந்த ஆசிடை நேரிசை
வெண்பாவிற்குச் செய்யுள் :

 

`வஞ்சியேன் என்றவன்றன் ஊர்உரைத்தான்; யானுமவன்
வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன்; - வஞ்சியான்,
வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்;
வஞ்சியாய் வஞ்சியார் கோ'
 
 

- யா. கா. 24 மே.

 

[நேர்ந்தேன் - ஆசு]

எனவும்,