இரண்டாம் அடி இறுதி தனிச்சொல் பெற்று மூன்று விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பாவிற்குச் செய்யுள் : |
| `அங்கண் விசும்பில் அகன்நிலாப் பாரிக்கும் திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் ; - திங்கள் மறுஆற்றும் ; சான்றோர்அஃ தாற்றார், தெருமந்து தேய்வர்; ஒருமா சுறின்.' | | | - யா. கா. 25 மே; நாலடி. 151 | | |
எனவும், |
மூன்றாம் அடி இறுதி தனிச்சொல் பெற்று இரு விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பாவிற்குச் செய்யுள் : |
| `வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை; அளந்தன போகம் அவரவர் ஆற்றான்; விளங்காய் திரட்டினார் இல்லை, களங்கனியைக் காரெனச் செய்தாரும் இல்.' | | | - யா. கா. 25 மே; நாலடி, 103 | | |
எனவும், |
அடிதொறும் தனிச்சொல் பெற்று மூன்று விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பாவிற்குச் செய்யுள் : |
| `இன்னாமை வேண்டின் இரவெழுக - இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னோடு செல்வது வேண்டின் அறஞ்செய்க - வெல்வது வேண்டின் வெகுளி விடல்.' | | | - யா. கா. 25 மே; நான்மணி. 17 | | |
எனவும், |
ஐந்தடியான் வந்த ஒரு விகற்பப் பஃறொடை வெண்பாவிற்குச் செய்யுள் : |
| `சேற்றுக்கால் நீலம் செருவென்ற வேந்தன்வேல் கூற்றுறழ் மொய்ம்பின் பகழி பொருகயல் | | | | | |