ஒரு விகற்பத்தான் வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பாவிற்குச் செய்யுள் : |
| `அறிந்தானை ஏத்தி, அறிவாங் கறிந்து, செறிந்தார்க்குச் செவ்வ னுரைப்பச் - சிறந்தார், சிறந்தமை ஆராய்ந்து கொண்டு' | | | - யா. கா. 26 மே. | | |
எனவும், |
ஒரு விகற்பத்தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்குச் செய்யுள் : |
| `நறுநீல நெய்தலும் கொட்டியும் தீண்டிப் பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும்; பாரி பறநாட்டுப் பெண்டிர் அடி' | | | - யா. கா. 26 மே. | | |
எனவும், |
இரு விகற்பத்தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்குச் செய்யுள் : |
| `சுரைஅழ அம்மி மிதப்ப, வரைஅனைய யானைக்கு நீத்து முயற்கு நிலைஎன்ப; கானக நாடன் சுனை' | | | - யா. கா. 26 மே. | | |
எனவும், |
மூன்று விகற்பத்தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்குச் செய்யுள் : |
| `முல்லை முறுவலித்துக் காட்டின - மெல்லவே சேயிதழ்க் காந்தள் துடுப்பீன்ற - போயினார் திண்தேர் வரவுரைக்கும் கார்' | | | - யா கா. 26 மே. | | |
எனவும் வரும். பிறவும் வந்துழிக் கண்டுகொள்க. இனிச் செப்பல் ஓசையில் சிதையாது நேரும் நிரையும் நேர்பும் நிரைபும் ஆகிய சீர்களை இறுதியாக உடைய சிந்தடியான் முடியும் வெண்பாக்களை ஓசை ஊட்டுமாறு. |