பக்கம் எண் :

114

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 

 

`பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்ழு
 
 

- குறள் 1121

 
     இதனை,

 

`கூவிளம் கூவிளம் தேமா கருவிளம்
கூவிளம் கூவிளம் நாள்ழு
 
     
எனவும்,

 

`நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்ழு
 
 

 - குறள் 1072

 
     இதனை,

 

`கூவிளம் தேமா புளிமா கருவிளங்காய்
தேமா புளிமா மலர்ழு
 
     
எனவும்,

 

`கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்புழு
 
 

- குறள் 984

 
     இதனை,

 

`தேமா கருவிளம் தேமா புளிமாங்காய்
தேமா கருவிளம் காசுழு
 
     
எனவும்,

 

`அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகுழு
 
 

- குறள் 1

 
     இதனை,

 

`புளிமா புளிமா புளிமாங்காய் தேமா
புளிமா புளிமா பிறப்புழு
 
 

- குறள் 1

 
எனவும், முறையே அலகிட்டு ஓசை ஊட்டி அவ்வாறாதல் காண்க. பிறவும் அன்ன.
(21)