|
717 | தன்சீர் தன்சீரோடு ஒன்றலும், வேற்றுச் சீரோடு உறழ்தலும், எனத் தளை பொதுவாக இருவகைப்படும் என்பது. | 8 | |
718 | மா முன் நேரும் விளம் முன் நிரையும் ஒன்றும் சீர்கள் ஆசிரியப்பாவிற்கும், மாமுன் நிரையும் விளம் முன் நேரும் ஒன்றும் இயற்சீரும், காய் முன் நேர் ஒன்றும் வெண் சீரும் வெண்பாவிற்கும், கனிமுன் நிரையும் நேரும் ஒன்றும் இருசீர்களும் வஞ்சிப்பாவிற்கும், காய் முன் நிரை ஒன்றும் சீர் கலிப்பாவிற்கும் சிறப்பாக உரிய என்பது. | 9 | |
719 | குறள் சிந்து அளவு நெடில் கழிநெடில் என அடி ஐந்து வகைப்படும் என்பது. | 10 | |
720 | குறள்அடி ஒருதளை, சிந்தடி இருதளை, அளவடி மூன்று தளை, நெடிலடி நான்குதளை, கழிநெடிலடி ஐந்து முதல் ஏழு அளவும் தளை பெறும் என்பது. | 11 | |
721 | வெண்பா ஆசிரியம் கலி என்ற மூன்று பாக்களும் நேர் அடியும் வஞ்சிப்பாக் குறள் அடியும் சிந்து அடியும், பாஇனங்கள் எல்லா அடிகளும் பெறும் என்பது. | 12 | |
722 | மோனை எதுகை முரண் இயைபு அளபெடை எனத் தொடைகள் ஐந்து; இவற்றோடு உறழ்ந்து வரும் இணை பொழிப்பு ஒரூஉகூழை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் முற்று எனத் தொடை விகற்பம் முப்பத்தைந்து என்பது. | 13 | |
723 | முதல் எழுத்து ஒன்றுவது மோனை; முதல் எழுத்து அளவு ஒத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றுவது எதுகை; கடை எழுத்து ஒத்திருப்பது இயைபு; | 14 | |
|
|