|
| `தனிச்சொல் தழுவல ஆகி விகற்பம் பலபல தோன்றினும் ஒன்றே வரினும் இதற்பெயர் இன்னிசை என்றிசி னோரே.' | | | - காக்கை. | | |
| `ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல் இன்றி வருவன ; இன்னிசை வெண்பா.' | | | - சிறுகாக்கை | | |
| `ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல் இன்றி நடப்பது ; இன்னிசை வெண்பா.' | | | - அவிநயம் | | |
| `ஒருவிகற் பாகித் தனிச்சொல் இன்றியும், இருவிகற் பாகித் தனிச்சொல் இன்றியும், தனிச்சொல் பெற்றுப் பலவிகற் பாகியும் தனிச்சொல் இன்றிப் பலவிகற் பாகியும், அடியடி தோறும் ஒரூஉத்தொடை அடைநவும், எனஐந் தாகும் இன்னிசை தானே.' `தொடைஅடி இத்துணை என்னும் வழக்கம் உடையதை அன்றி, உறுப்பழிவு இல்லா நடையது பஃறொடை நாமம் கொளலே. | | | - காக்கை. | | |
| `தொடைபல தொடுப்பன பஃறொடை வெண்பா.' | | | - சிறுகாக்கை. | | |
| `தொடைமிகத் தொடுப்பன பஃறொடை வெண்பா.' | | | - அவிநயம் | | |
| `ஏழடி இறுதி ஈரடி முதலா ஏறிய வெள்ளைக்கு இயைந்த அடியே, மிக்கடி வருவது செய்யுட்கு உரித்தே.' `ஆறடி முக்கால் பாட்டெனப் படுமே, ஏறிய அடியும் செய்யுள் வரையார்.' `ஆதியாய் ஆற்றல் உடைத்தாய் வரம்பிகவா நீதிசால் நூல்பொருந்தி நிற்றலால் - ஓதநீர் மண்பாவு தொல்சீர் மறைவாணர் பாற்சார்த்தி வெண்பா உரைத்தார் விரித்து.' | | | | | |