பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 22

125

 

வெண்பா இனம்

731.

அடிஒரு மூன்றுவந்து அந்தடி சிந்தாய்
விடின்அது வெள்ளொத் தாழிசை ஆதலும்,
மூன்றடி முதலா ஏழடி காறும்வந்து
ஈற்றடி சிலசில சீர்குன் றினும்அவை
வேற்றுஒலி விரவினும் வெண்துறை ஆதலும்,
ஒருமூன்று ஒருநான்கு அடிஅடி தோறும்
தனிச்சொல் தழுவி நடப்பது வெள்ளை
விருத்தம் எனப்பெயர் வேண்டலும், விதியே.
 
     
இது மேல் கூறிய வெண்பாவிற்கு இனம் ஆகிய தாழிசை துறை விருத்தங்கள் ஆமாறு கூறுகின்றது.

     இ - ள் : மூன்றடியான் நடந்து ஈற்று அடி முச்சீர் அடியாய் முடியின் அது வெள்ளொத்தாழிசை ஆதலும், மூன்றடி முதலாக ஏழடி அளவும் நடந்து ஈற்றடியுள் சில அடிகள் சீலசீர் குறையினும் அவ்வாறு வருங்கால் முன்பின் சில அடி ஓர் ஓசையாய்ப் பின்பின் சில அடி மற்றோர் ஓசையாய் வேற்று ஒலி விரவிவரினும் வெண்துறை ஆதலும், மூன்றடியும் நான்கடியுமாய் அடிகள் தோறும் ஒரு சொல்லே இறுதிக்கண் தனிச் சொல்லாகப் பொருந்தி நடப்பது வெளி விருத்தம் எனப் பெயர் பெறுதலும் இலக்கணமாம் என்றவாறு.

     உரையில் கோடலான் வெள்ளொத்தாழிசை முச்சீரான் இறுங்கால் வெண்பாவே போலக் காசு பிறப்பு நாள் மலர் என்னும் வாய்பாட்டான் இறும் எனவும், முதல் அடி இரண்டும் அளவடியான் வரும் எனவும், சிந்தியல் வெண்பா ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கி வரின் அவையும் வெள்ளொத்தாழிசையாம் எனவும்,