பக்கம் எண் :

126

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
ஒருசார் வெண்டுறையின் ஈற்றடி ஒன்று ஒருசீர் குறைந்து வருவனவும் உள எனவும், வெளி விருத்தம் தனிச்சொல் பெற்று வருங்கால் அளவடியின் உட்பட்டு அடங்காது வரல் வேண்டும் எனவும் கொள்க.

     சீர் வரையறுத்திலாமையால் வெண்துறை எனைத்துச் சீரானும் அடியாய் வரும் என்க.

வெள்ளொத்தாழிசைக்குச் செய்யுள் :

 

`நண்பி தென்று தீய சொல்லார்,
முன்பு நின்று முனிவுசெய்யார்,
இன்பு வேண்டு பவர்'
 

- யா. கா. 28 மே.

எனவும்,

ஒருபொருள்மேல் மூன்று அடுக்கி வந்தவெள்ளொத் தாழிசைக்குச் செய்யுள் :

 

`அன்னாய், அறங்கொல்? நலங்கிளர் சேட்சென்னி
ஒன்னார் உடைபுறம் போல, நலம்கவர்ந்து
துன்னான் துறந்து விடல்'

`ஏடி ! அறங்கொல்? நலங்கிளர் சேட்சென்னி
கூடார் உடைபுறம் போல, நலங்கவர்ந்து,
நேடான் துறந்து விடல்'

`பாவாய் ! அறங்கொல்? நலங்கிளர் சேட்சென்னி
மேவார் உடைபுறம் போல, நலங்கவர்ந்து,
காவான் துறந்து விடல்'
 

- யா. கா. 28 மே.

இவை ஒருபொருள் மேல் மூன்று அடுக்கி வந்த சிந்தியல் வெண்பா
எனவும்,

மூன்று அடியான் வந்த ஓர்ஓலி வெண்துறைக்குச் செய்யுள் :

 

`தாளாளர் அல்லாதார் தாம்பலர் ஆயக்கால் என்னாம் என்னாம்?
யாளியைக் கண்டஞ்சி, யானை, தன் கோடிரண்டும்
பீலிபோல் சாய்த்து விடும்; பிளிற்றி ஆங்கே'
 

- யா. கா. 28 மே.