பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 22

127

 

நான்கு அடியான் வந்த ஓர்ஒலி வெண்துறைக்குச் செய்யுள் :

  `குழலிசைய வண்டினங்கள் கோழிலைய
     செங்காந்தள் குலைமேல்பாய,
அழலெரியின் மூழ்கினவால், அந்தோ, அளிய, என்று
     அயல்வாழ் மந்தி,
கலுழ்வனபோல் நெஞ்சயர்ந்து, கல்லருவி தூஉம்,
     நிழல்வரை நன்னாடன், நீப்பனோ அல்லன்.'
 
 

- யா. கா. 28 மே

 
எனவும்,

ஏழடியான் வந்த வேற்று ஒலி வெண்துறைக்குச் செய்யுள் :

  `முழுங்குதிரைக் கொற்கைவேந்தன், முழுதுலகும் ஏவல்செய,
     முறைசெய் கோமான்
வழங்குதிறல் வாள்மாறன், மாச்செழியன், தாக்கரிய
     வைவேல் பாடிக்
கலந்துநின் றாரெலாம் கருதலா காவணம்
இலங்குவாள் இரண்டினால், இருகைவீ சிப்பெயர்ந்து
அலங்கல்மா லையவிழ்ந்து ஆட,வா டும்,இவள்,
பொலங்கொள்பூந் தடங்கட்கே, புரிந்துநின் றார்எலாம்
விலங்குஉள் ளந்தப, விளிந்துவே றாபவே'
 
 

- யா. கா. 28 மே

 
எனவும்,

  `வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும்
உறவுற வரும்வழி உரைப்பன உரைப்பன்மன்;
செறிவுறு தகையினர் சிறந்தனர் இவர்நமக்கு
அறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின்;
பிறபிற நிகழ்வன பின்'
 
 

 - யா. கா. 28 மே.

 
எனவும்,