|
மூன்று அடியான் வந்த வெளி விருத்தத்திற்குச் செய்யுள் : |
| கொண்டல் முழங்கினவால் கோபம் பரந்தனவால்; | | | - என்செய்கோயான் | | |
| வண்டு வரிபாட வார்தளவம் பூத்தனவால்; | | | - என்செய்கோயான் | | |
| எண்திசையும் தோகை இருந்தகவி ஏங்கினவால்; | | | - என்செய்கோயான் - யா. கா. 28 மே. | | |
எனவும்,
நான்கு அடியான் வந்த வெளி விருத்தத்திற்குச் செய்யுள் : |
| `ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் ; - ஒரு சாரார் கூகூ என்றே கூவிளி கொண்டார் ; - ஒரு சாரார் மாமா என்றே மாய்ந்தனர் நீந்தார் ; - ஒரு சாரார் ஏகீர் நாய்கீர் என்செய்தும், என்றார் ; - ஒரு சாரார்' | | | - யா. கா. 28 மே. | | |
எனவும் வரும். பிறவும் வந்துழிக் காண்க. | (22) |
விளக்கம் |
தனியே வந்த வெள்ளொத்தாழிசைக்குச் செய்யுள் : |
| `கனக மார் கவின்செய் மன்றில் அனக நாட கற்கெம் அன்னை மனைவிதாய் தங்கை மகள்.' | | | - சி. செ. கோ. 33 | | |
ஒரு பொருள் மேல் மூன்று அடுக்கி வந்த வெள்ளொத் தாழிசைக்குச் செய்யுள் : |
| `அம்பேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே ! கொம்பே றுடையான் கழலிறைஞ்சா தென்கொலியாம் வம்பே இறந்து விடல்.' | | | | | |