| `வாணேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே ! நீணாகம் பூண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம் வீணே இறந்து விடல்.' `கோளாருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே ! ஆளாக ஆண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம் வாளா இறந்து விடல்.' | | | - சி.செ.கோ. 34 | | |
மூன்றடியான் வந்த ஓரொலி வெண்டுறைக்குச் செய்யுள் : |
| `பரசிருக்கும் தமிழ்மூவர் பாட்டிருக்கும் திருமன்றில், பரசொன்றேந்தி, அரசிருக்கும் பெருமானார்க் காட்செய்யார், என்செய்வார்? முரசிருக்கும் படைநமனார் முன்னாகும் அந்நாளே.' | | | - 35 | | |
நான்கடியான் வந்த ஓரொலி வெண்டுறைக்குச் செய்யுள் : |
| `படர்ந்தரும்வெவ் வினைத்தொடர்பால் பவத்தொடர்பு;அப் பவத்தொடர்பால் படராநிற்கும் விடலரும்வெவ் வினைத்தொடர்புஅவ் வினைத்தொடர்புக் கொழிபுண்டோ? வினையேற் கம்மா! இடர்பெரிது முடையேன் ;மற் றென்செய்கேன்; என்செய்கேன்? அடலரவம் அரைக்கசைத்த அடிகேளோ! அடிகேளோ!' | | | -36 | | |
ஏழடியான் வந்த வேற்றொலி வெண்டுறைக்குச் செய்யுள் : |
| `கூற்றிருக்கும் அடலாழிக் குரிசில்முத லோரிறைஞ்சக் கொழுந்தேன்பில்கி ஊற்றிருக்கும் தில்லைவனத் தசும்பிருக்கும் பசும்பொன்மன்றத் தொருதாளூன்றி, வண்டுபா டச்சுடர் மகுடமா டப்பிறைத் துண்டமா டப்புலித் தோலுமா டப்பகிர் அண்டமா டக்குலைந் தகிலமா டக்கருங் கொண்டலோ டுங்குழற் கோதையோ டுங்கறைக் கண்டனா டுந்திறம் காண்மினோ! காண்மினோ!' | | | -37 | | |
|