|
|
| அளபெடை எழுத்து ஒன்றுவது அளபெடை; இருசீர் மிசை வரத் தொடுப்பது இணை, முதற்சீரும் மூன்றாம் சீரும் ஒன்றத் தொடுப்பது பொழிப்பு, முதற்சீரும் நான்காம் சீரும் ஒன்றத் தொடுப்பது ஒரூஉ, முதல் மூன்று சீர்கள் ஒன்றத் தொடுப்பது கூழை, முதல் அயல் சீர் ஒழித்து அல்லன ஒன்றத்தொடுப்பது மேற்கதுவாய், கடைஅயல் சீர் ஒழித்து அல்லன ஒன்றத் தொடுப்பது கீழ்க்கதுவாய், நான்கு சீர்களும் ஒன்றத் தொடுப்பது முற்று ஆகும் என்பது. | | |
724 | செந்தொடை, இரட்டைத்தொடை அந்தாதித்தொடை என்ற தொடைகளும் உண்டு என்பது. | 15 | |
725 | தொடையும் தொடை விகற்பமும் இன்றி வருவது செந்தொடை; நாற்சீர் அடி முழுவதும் ஒரு சொல் அடுக்கி வருவது இரட்டை; செய்யுளுள் அடியும் சீரும் அசையும் எழுத்தும் முடிந்துவருவன அடுத்து முதலாக வருவது அந்தாதி ஆகும் என்பது. | 16 | |
726 | வெண்பா அகவல் கலி வஞ்சி என்று பா நான்கு வகைப்படும் என்பது. | 17 | |
727 | பா இனங்கள் தாழிசை துறை விருத்தம் என்று மூவகைப்படும் என்பது. | 18 | |
728 | வெண்பா செப்பல் ஓசை உடையது; அஃது ஈற்றடி முச்சீர் அடியாய் வரும்; இறுதிச்சீர் அசைச்சீர் ஆகவும் வரும் என்பது. | 19 | |
729 | குறள் நேரிசை இன்னிசை பஃறொடை சிந்தியல் என வெண்பா ஐந்து வகைப்படும் என்பது. | 20 | |
|
|
|