| `அடியொரு மூன்றுவந்து அந்தடி சிந்தாய் விடின்அது வெள்ளொத் தாழிசை ஆகும்.' | | | - யா. வி. 66 | | |
| `வெண்டாழிசையே, மூன்றடியாய் வெள்ளை போன்று இறும்.' | | | - யா. கா. 28 | | |
| `அடிஐந் தாகியும் மிக்கும் ஈற்றடி ஒன்றும் இரண்டும் சீர்தபின் வெண்டுறை.' | | | - அவிநயம் | | |
| `பெற்றஅடி ஐந்தினும் பிறவினும் பாட்டாய் இற்ற அடியும் ஈற்றயல் அடியும் ஒன்றும் இரண்டும் நின்ற அதன்சீர் கண்டன குறையின் வெண்டுறை ஆகும்.' | | | - மயேச்சுரம் | | |
| `ஐந்துஆறு அடியின் நடந்தவும் அந்தடி ஒன்றும் இரண்டும் ஒழிசீர்ப் படுநவும் வெண்டுறை நாமம் விதிக்கப் படுமே.' | | | - காக்கை | | |
| `மூன்றடி முதலா ஏழடி காறும்வந்து ஈற்றடி சிற்சில சீர்தப நிற்பினும் வேற்றொலி விரவினும் வெண்டுறை ஆகும்.' | | | - யா. வி. 67 | | |
| `மூன்று இழிபு ஏழுஉயர்வாய் ஆன்றடி தாஞ்சில அந்தம்குறைந்திறும் வெண்டுறையே.' | | | - யா. கா. 28 | | |
| `ஒருமூன்று ஒருநான்கு அடியடி தோறும் தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை விருத்தம் எனப்பெயர் வேண்டப் படுமே.' | | | - காக்கை | | |
| `நான்கும் மூன்றும் அடிதொறும் தனிச்சொல் தோன்ற வருவன வெளிவிருத் தம்மே.' | | | - சிறுகாக்கை | | |
| `மூன்றும் நான்கும் அடிதொறும் தனிச்சொல் கொளீஇய எல்லாம் வெளிவிருத் தம்மே.' | | | - அவிநயம் | | |
| `மூவடி ஆகியும் நாலடி ஆகியும் பாவடி வீழ்ந்து பாடலுள் நயந்தும் கடிவரை வில்லா அடிதொறும் தனிச்சொல் திருத்தகு நிலைய விருத்தம் ஆகும்.' | | | - மயேச்சுரம் | | |
|