பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 23

133

 

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்
 

732. அகவல் இசையன அகவல் மற்றுஅவை
ஏஓ ஈஆய் எனஐஎன்று இறுமே.
 
     
இது நிறுத்தமுறையானே ஆசிரியப்பா ஆமாறு பொது வகையான் உணர்த்துகின்றது.

     இ-ள் : அகவல் ஓசையைத் தமக்கு ஓசையாக உடையனவாம் எல்லா
ஆசிரியப்பாவும். அவை ஏ என்றும் ஓ என்றும் ஈ என்றும் ஆய் என்றும் என என்றும்
ஐ என்றும் இறும் என்றவாறு.

     மற்று என்ற மிகையானே, ஏந்திசை அகவலும், தூங்கிசை அகவலும், ஒழுகிசை
அகவலும், என அகவல் ஓசை மூன்று வகைப்படும்.
  `நேர்நேர் இயற்றளை யான்வரும் அகவலும்,
நிரைநிரை இயற்றளை யான்வரும் அகவலும்,
ஆயிரு தளையும்ஒத்து ஆகிய அகவலும்,
ஏந்தல், தூங்கல், ஒழுகல், என்றிவை
ஆய்ந்த நிரல்நிறை ஆகும் என்பழு
 
     
என்ப ஆகலின்.

இவற்றிற்குச் செய்யுள் :

  (ஏந்திசை அகவல்)
`போதுசாந்தம்......துன்னு வாரேழு
 
 

- யா. கா. 5 மே.

 
எனவும்,
  (தூங்கிசை அகவல்)
`அணி நிழல்.....பரிசறுப் பவரேழு
 
 

- யா. கா. 5 மே.

 
எனவும்,
  (ஒழுகிசை அகவல்)
`குன்றக்குறவன்......சுணங்கேழு
 
 

- யா. கா. 9 மே.

 
எனவும் முறையே காண்க.