|
| `குறளடி சிந்தடி என்றா இரண்டும் இடைவர நிற்பின் இணைக்குறள்' | | | - காக்கை. | | |
என்றாரேனும், உரையில் கோடலான் சிந்தடிஇணைதலும் இணைக்குறளாம் எனக்கொள்க. |
| `நேரிசை ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் : `நிலத்தினும் பெரிதே, வானினும் உயர்ந்தன்று; நீரினும் ஆரளவு இன்றே; சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே' | | | - குறுந். 3 - யா. கா. 29 மே. | | |
எனவும், |
ஈற்று அயல்அடி இரண்டும் சிந்தடியான் வந்த இணைக்குறள் ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் : |
| `நீரின் தண்மையும், தீயின் வெம்மையும், சாரச் சார்ந்தூரத் தீரும்; சாரல் நாடன் கேண்மை, சாரச் சாரச் சார்ந்து, தீரத் தீரத் தீர்பொல் லாதே' | | | - யா. கா. 29 மே. | | |
எனவும், |
இருசீர்அடியும் முச்சீர்அடியும் இடைஇடைவந்த இணைக்குறள் ஆசிரியப்பாவிற்குச் செய்யுள்; |
| `சிறியகள் பெறினே, எமக்கீயும் மன்னே; பெரியகள் பெறினே, யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே; சிறுசோற் றாறும் நனிபல கலத்தன் மன்னே; பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே; என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்குஈயும் மன்னே; அம்பொடு வேல்நுழை வழியெல்லாழ் தான்நிற்கும் மன்னே; | | | - யா. வி. 70 | | |
|