பக்கம் எண் :

14

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்

 
தொடர் எண்   இயல் எண்
730 ஈரடியான் வருவது குறள் வெண்பா; இரண்டு
வெண்பாக்கள் இடையே தனிச்சொல் பெற்று இயைந்து
இருவிகற்பமகாவும் ஒருவிகற்பமாகவும் செப்பல் ஓசை
சிதையாமலும் வரின் நேரிசை வெண்பா; நான்கு
அடிகள் ஒரு விகற்பமோ பல விகற்பமோ
உடையவாகித் தனிச்சொல் இன்றி வரின் இன்னிசை
வெண்பா; பல அடிகளாக வரும் வெண்பா பஃறொடை
வெண்பா; நேரிசை இன்னிசைபோல மூன்று அடியான்
வரும் வெண்பா சிந்தியல் வெண்பா என்பது.
21
731 நாற்சீர் அடிகள் இரண்டோடு ஈற்று அடி முச்சீராய்
வருவது வெள்ளொத்தாழிசை; மூன்றடிச்சிறுமையும்
ஏழடிப்பெருமையும் பெற்று ஈற்றடி சில சீர் குன்றி
வருதலும், ஓர் ஒலியும் வேற்று ஒலியும் விரவி
வருதலும் பொருந்துவது வெண்டுறை; அடிதோறும்
நாற்சீரும் ஐந்தாஞ்சீர் ஒரே தனிச்சொல்லுமாய் மூன்று
அடியானும் நான்கு அடியானும் அமைவது வெளி
விருத்தம்-என்பது.
22
732 அகவல் ஓசையை உடையன ஆசிரியப்பாக்களாம்;
அவ ஏ ஓ ஈ ஆய் என ஐ - என்பனவற்றான்
முடியும் என்பது.
23
733 நேரிசை, இணைக்குறள், நிலைமண்டிலம், அடிமறி
மண்டிலம் - என ஆசிரியப்பா நான்கு வகைப்படும்
என்பது.
24
734 கடை அயலடி முச்சீரடியாக வருவது நேரிசை
ஆசிரியம்; முதலடியும் ஈற்றடியும் அளவடியாய்
இடையே இருசீர் அடியும் முச்சீரடியும் விரவிவர
25