பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 25

141

 

அடிமறிமண்டில ஆசிரியப்பாவிற்குச் செய்யுள் :

  `தீர்த்தம் என்பது சிவகங் கையே;
ஏத்த ருந்தலம் எழிற்புலி யூரே;
மூர்த்தி அம்பலக் கூத்தன துருவே.'
 
 

 - 45

 
என்றும்,

ஒத்த நூற்பாக்கள்

  `கைக்கிளை ஆசிரியம் வருவ தாயின்
முச்சீர் எருத்தின் றாகி முடிவடி
எத்திறத் தானும் ஏகாரத் திறுமே.'
 
 

- கடியநன்னியம்

 
  `ஈற்றதன் மேலடி ஒருசீர் குறையடி
நிற்பது நேரிசை ஆசிரி யம்மே.'
 
 

- அவிநயம்

 
  `இறுசீர் அடிமேல் ஒருசீர் குறையடி
பெறுவன நேரிசை ஆசிரி யம்மே.'
 
 

- சிறுகாக்கை

 
  `அந்த அடியின் அயலடி சிந்தடி
வந்தன நேரிசை ஆசிரி யம்மே.'
 
 

- யா. வி. 71

 
  `இடைபல குறைவது இணைக்குறள் ஆகும்.'  
 

- அவிநயம்

 
  `அளவடி அந்தமும் ஆதியும் ஆகிக்
குறளடி சிந்தடி என்றா இரண்டும்,
இடைவர நிற்பது இணைக்குறள் ஆகும்.'
 
 

- காக்கை.

 
  `இடைஇடை சீர்தபின் இணைக்குறள் ஆகும்.'  
 

- சிறுகாக்கை

 
  `ஈற்றயல் குறைந்த நேரிசை; இணையாம்
ஏற்ற அடியின் இடைபல குறைந்தன.'
 
 

- மயேச்சுரம்

 
  `இணைக்குறள் இடைபல குறைந்திறின் இயல்பே.'  
 

- யா. வி. 72

 
  `ஒத்த அடித்தாய் உலையா மரபொடு
நிற்பது தானே நிலைமண் டிலமே.'

`என்என் கிளவியை ஈறாப் பெறுதலும்
அன்ன பிறவும் அந்தம் நிலைபெற
நிற்கவும் பெறூஉம் நிலைமண் டிலமே.'