|
| `ஒத்த அடித்தாய் உலையா மண்டிலம் என்என் கிளவியை ஈறா கப்பெறும் அன்ன பிறவும்அந் நிலைமண் டிலமே.' | | | - அவிநயம் | | |
| `ஒத்த அடியின நிலைமண் டிலமே.' | | | - மயேச்சுரம் | | |
| `என்னெனும் அசைச்சொலும் பிறவும் ஒன்றித் துன்னவும் பெறூஉம் நிலைமண் டிலமே.' | | | - மயேச்சுரம் | | |
| `என்னென்று இறுதல் வரைநிலை இன்றே.' | | | - மயேச்சுரம் | | |
| `அல்லா ஒற்றினும் அதனினும் இறுதி, நில்லா அல்ல நிற்பன வரையார்.' | | | - மயேச்சுரம் | | |
| `ஒத்த அடியின தாகியும் ஒற்றிற நிற்பவும் என்னும் நிலைமண் டிலமே.' | | | - யா. வி. 74 | | |
| `உரைப்போர் குறிப்பின் உணர்வகை அன்றி இடைப்பால் முதல்ஈறு என்றிவை தம்முள் மதிக்கப் படாதன, மண்டில யாப்பே. | | | - காக்கை. | | |
| `கொண்ட அடிமுத லாயொத் திறுவது மண்டில யாப்பென வகுத்தனர் புலவர்.' | | | - சிறுகாக்கை | | |
| `கொண்ட அடிமுத லாயொத் திறுவது, மண்டிலம் ஒத்திறின் நிலைமண் டிலமே.' | | | - அவிநயம் | | |
| `எவ்வடி யானும் முதல்நடு இறுதி அவ்வடி பொருள்கொளின் மண்டில யாப்பே.' | | | - மயேச்சுரம் | | |
| `எழுவாய் இரட்டித்து இறுதி ஒன்றாய் வரின்அது மண்டில ஆசிரி யம்மே.' `மனப்படும் அடிமுத லாயிறின் மண்டிலம்.' | | | - யா. வி. 73 | | |
| `கடைஅயற் பாதம்முச் சீர்வரின் நேரிசை; காமருசீர் இடைபல குன்றின் இணைக்குறள்; எல்லா அடியும்ஒத்து நடைபெறு மாயின் நிலைமண் டிலம்;நடு ஆதிஅந்தத்து அடைதரு பாதத் தகவல் அடிமறி மண்டிலமே.' | | | -யா. கா. 29 | | |
|