பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 25, 26

143

 
  `ஈற்றயல் முச்சீர் வரின்நே ரிசையாம்; இணைக்குறட்பா
ஏற்ற குறள்சிந் திடையே வரும்; நிலை மண்டிலப்பாச்
சாற்றிய தன்னே ரடியா லியலும்; தலைநடுஈறு
ஆற்றிய பாதத் தகவல் அடிமறி மண்டிலமே.'
 
 

 - வீ. சோ. 115

 
  `நேரிசைச் சிறுமை நேரும்மூ வடியே;
வரையா பெருமையே; மற்றடி அளவடி
ஈற்றயல் சிந்தடி இயைந்து வருமே.'
 
 

 - தொ. வி. 224

 
  `இணைக்குறள் முதல்ஈற்று ஈரடி அளவடி;
இடைக்குறள் சிந்தடி இணையப் பெறுமே.'
 
 

 - 225

 
  `நிலைமண் டிலத்தெங்கும் நீங்கா அளவடி;
அடிமறி மண்டிலம் அந்நடைத் தாகி
அடிமா றினும்தான் அழியா நிலைத்தே.'
 
 

- 226

 
  `ஈற்றய லடிமுச் சீராய் வருவது
நேரிசை அகவற் பாவா கும்மே.'
 
 

- மு. வி. யா. செ. 23

 
  `எல்லா அடியும்ஒத் திறின்நிலை மண்டில
அகவல் என்மனார் அறிந்திசி னோரே.'
 
 

- 24

 
  `ஆதியும் அந்தமும் அளவடி யாகி
குறளடி சிந்தடி என்றாங்கு இரண்டும்
இடைவரல் இணைக்குறள் ஆசிரி யம்மே.'
 
 

- 25

 
  `மூன்றடி முதலா முடிந்தெலா அடியும்
இடைகடைமுத லாயெடுத் தாலும்,
ஓசையும் பொருளும் உலவாது வருவன,
அடிமறி மண்டில அகவலா கும்மே.'
 
 

- 26

 

25

ஆசிரியப்பா இனம்

735. மூன்றுஅடி ஒத்து முடிவன ஆய்விடின்
ஆன்ற அகவல் தாழிசை ஆதலும்,
எருத்துஅடி குன்றியும் இடைஇடை குன்றியும்