பக்கம் எண் :

செய்யுளியல் - முன்னுரை

15

 
தொடர் எண்   இயல் எண்
  அமைவது இணைக்குறள் ஆசிரியம்; எல்லா அடிகளும்
சமமான நாற்சீர் அடிகளாய் வருவது நிலைமண்டில
ஆசிரியம்; நாற்சீர் அடிப் பாடலின் எந்த அடியை
முதலாகவும் இடையாகவும் கடையாகவும் மாற்றினும்
ஓசையும் பொருளும் மாறாதன அடிமறிமண்டில
ஆசிரியம் - என்பது.
 
735 மூன்றடி ஒத்து முடிவன ஆசிரியத்தாழிசை; கடை அடி
குன்றியும் இடை இடையே குன்றியும் இவற்றோடு இடை
மடக்கியும் மடக்காமலும் நான்கு அடிகளாய் எனைத்துச்
சீரானும் வருவன ஆசிரியத்துறை; கழி நெடில் அடிகள்
நான்கு ஒத்து முடிய அமைவன ஆசிரிய விருத்தம்
என்பது.
26
736 துள்ளல் ஓசையை உடையன கலிப்பாக்களாம். அவை
வெள்ளைச் சுரிதகத்தான் ஆவது, ஆசிரியச்
சுரிதகத்தான் ஆவது முடியும் என்பது.
27
737 கலிப்பா-ஒத்தாழிசைக்கலி, வெண்கலிப்பா, கொச்சகக்
கலி என மூவகைப்படும் என்பது.
28
738 தரவு ஒன்று தாழிசை மூன்று தனிச்சொல் ஒன்று
சுரிதகம் ஒன்று என இவை அமைந்து நிகழ்வது
நேரிசை ஒத்தாழிசைக்கலி; தாழிசைக்கும் தனிச்
சொல்லிற்கும் இடையே அளவடி, சிந்தடி,
குறளடிகளான் ஆகிய அம்போதரங்கம் வர அமைவது
அம்போதரங்க ஒத்தாழிசைக்கலி; தரவு தாழிசை
அராகம் அம்போ தரங்கம் தனிச்சொல் சுரிதகம் என்ற
உறுப்புக்களை உடையது வண்ணக ஒத்தாழிசைக்கலி;
வேற்றுத்தளை தட்ட நாற்சீர் அடிகளான் இயன்று
ஈற்றடிமுச்சீராய் அமைவது வெண்கலிப்பா;
நாற்சீரடிகளான் இயன்று வெண்டளையே தட்டு
29