பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 26

151

 

பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் :

  `கைத்தலத்த ழற்கணிச்சி வைத்திடப்பு றத்தொ ருத்தி
     கட்கடைப்ப டைக்கி ளைத்த திறலோராம்
முத்தலைப்ப டைக்க ரத்தெம் அத்தர் சிற்சபைக்குள் நிற்கும்
     முக்கணக்க ருக்கொ ருத்தர் மொழியாரோ?
நித்திலத்தி னைப்ப தித்த கச்சறுத்த டிக்க னத்து
     நிற்குமற்பு தத்த னத்தி னிடையே, வேள்
அத்திரத்தி னைத்தொ டுத்து விட்டுநெட்ட யிற்க ணித்தி
     லக்கணுற்றி டச்செய் விக்கு மதுதானே.'
 
 

- சி. செ. கோ. 56

 

ஒத்த நூற்பாக்கள்

  `ஒத்த ஒருபொருள் மூவடி முடியின்அஃது
ஒத்தா ழிசையாம் உடன்மூன்று அடுக்கின்.'
 
 

- மயேச்சுரம்

 
  `அடிமூன்று ஒத்திறின் ஒத்தா ழிசையே.'  
 

 - சிறுகாக்கை

 
  `மூன்றடி ஒத்த முடிவின வாய்விடின்
ஆன்ற அகவல் தாழிசை ஆகும்.'
 
 

 - யா. வி. 75

 
  `அடித்தொகை நான்குபெற்று அந்தத் தொடைமேல்
கிடப்பது நாற்சீர்க் கிழமையது ஆகி
எடுத்துரை பெற்ற இருநெடில் ஈற்றின்
அடிப்பெறின் ஆசிரி யத்துறை ஆகும்.'
 
 

- காக்கை

 
  `அளவடி ஐஞ்சீர் நெடிலடி தம்முள்
உறழத் தோன்றி ஒத்த தொடையாய்
விளைவதும் அப்பெயர் வேண்டப் படுமே.'

 

 

- காக்கை

 
  `எண்சீர் அடியீற் றயலடி குறைநவும்
ஐஞ்சீர் அடியினும் பிறவினும் இடையொன்ற
வந்த தொடையாய் அடிநான் காகி
உறழக் குறைநவும் துறையெனப் படுமே.'

 

 

- மயேச்சுரம்