|
|
| `நாற்சீர் அடிநான்கு அந்தத்தொடை நடந்தவும் ஐஞ்சீர் அடிநடந்து உறழடி குறைந்தவும் அறுசீர் எழுசீர் வலிய நடந்தவும் தன்சீர்ப் பாதியின் அடிமுடிவு உடைத்தாய் அந்தத் தொடையிவை அடியா நடப்பின் குறையா உறுப்பினது துறையெனப் படுமே.' | | | - அவிநயம் | | |
| `கடையதன் அயலடி கடைதபு நடையவும் நடுவடி மடக்காய் நான்கடி யாகி இடையடி குறைநவும் அகவல் துறையே.' | | | - யா. வி. 76 | | |
| `அறுசீர் முதலா நெடியவை எல்லாம் நெறிவயின் திரியா நிலத்தவை நான்காய் விளைகுவது அப்பா இனத்துள விருத்தம்.' | | | - காக்கை | | |
| `அறுசீர் எழுசீர் அடிமிக வரூஉம் முறைமைய நாலடி விருத்தம் ஆகும்.' | | | - சிறுகாக்கை | | |
| `அறுசீர் எழுசீர் அடிமிக நின்றவும் குறைவில் நான்கடி விருத்த மாகும்.' | | | - அவிநயம் | | |
| `ஆறு முதலா எண்சீர் காறும் கூறும் நான்கடி ஆசிரிய விருத்தம்.' | | | - மயேச்சுரம் | | |
| `கழிநெடில் அடிநான்கு ஒத்துஇறின் விருத்தம்,அஃது அழியா மரபினது அகவ லாகும்.' | | | - யா. வி. 77 | | |
| `தருக்கிய தாழிசை மூன்றடி ஒப்பன; நான்கடியாய் எருத்தடி நைந்தும் இடைமடக் காயும் இடைஇடையே சுருக்கடி யாயும் துறையாம்; குறைவில்தொல் சீர்அகவல் விருத்தம் கழிநெடில் நான்கொத் திறுவது; மெல்லியலே.' | | | - யா. கா. 30 | | |
| `மூன்றடி ஒப்பன தாழிசை; நான்காய்க் கடைஅயற்கண் ஏன்றடி நைந்து இடைமடக் காயும் இடையிடையே தோன்றடி குன்றியு மாகுந்துறை; தொல் கழிநெடிலாய் ஆன்றடி நான்கொத் திடிலா சிரிய விருத்தமன்றே.' | | | - வீ. சோ. 122 | | |
|