பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 26, 27

153

 
  `அகவல் தாழிசை அடிமூன்று ஒத்தவாய்
அடுக்கிய மூன்றும் ஒன்றாகியும் வருமே.'
 
 

- தொ. வி. 244

 
  `ஆசிரி யத்துறை அளவில் சீர்வரும்
அடிநான்கு ஈற்றயல் ஆதி குறைநவும்
இருவழி இடைமடக் கினவும்நால் வகைய.'
 
 

 - 240

 
  `விருத்த விகற்பம் விளக்கிய காலை
அகவல் கழிநெடி வடிகொள் விருத்தமே.'
 
 

- 248

 
  `மூன்றடி ஒத்து வருவதும் ஒருபொருள்
மேல்மூன்று அடுக்கி வருவதும் அகவல்
தாழிசை ஆமெனச் சாற்றப் படுமே.'
 
 

- மு. வீ. யா. செ. 27

 
  `அளவடி யாய்ஈற் றயலடி குறைநவும்
ஈற்றய லடிகுறைந் திடைமடக் காக
வருநவும் இடைஇடை குறைந்து வருநவும்
அகவல் துறையென அறையப் படுமே.'
 
 

 - 28

 
  `கழிநெடில் அடிநான்கு ஒத்திறின் அகவல்
விருத்தம் என்மனார் மெய்யுணர்ந் தோரே.'

 

 

- 29

 

26

கலிப்பாவின் பொதுஇலக்கணம்
 

736. துள்ள இசையன கலியே மற்றவை
வெள்ளையும் அகவலு மாய்விளைந்து இறுமே.

 

     
இது நிறுத்தமுறையானே கலிப்பா ஆமாறு பொது வகையான் உணர்த்துகின்றது.

     இ-ள் : துள்ளல் ஓசையைத் தமக்கு ஓசையாக உடைனயவாம் எல்லாம்
கலிப்பாவும்; அக்கலிப்பாக்கள் வெள்ளைச்சுரிதகத்தால்தான் ஆசிரியச்சுரிதகத்தால்தான்
முற்றுப்பெற்று முடியும் என்றவாறு.