154 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | மற்று என்ற மிகையானே ஏந்திசைத்துள்ளலும் அகவல்துள்ளலும் பிரிந்திசைத்துள்ளலும் எனத் துள்ளல் ஓசை மூன்று வகைப்படும். | | `ஏந்திசைத் துள்ளல் கலித்தளை இயையின்; வெண்டளை தன்தளை என்றிரண்டு இயையின் ஓன்றிய அகவல் துள்ளலென்று ஓதுப; தன்தளை பிறதளை என்றுஇவை அனைத்தும் பொருந்தி வரினே பிரிந்திசைத் துள்ளல்' | | | - அவிநயம் | | | எனக் கூறுப ஆகலின். | இவற்றிற்குச் செய்யுள்: | ஏந்திசைத் துள்ளல்: | | `முருகவிழ்தா மரைமலர்மேல் முடிஇமையோர் புடைவரவே, வருசினனார் தருமறைநூல் வழிபிழையா மனமுடையார், இருவினைபோய் விழமுனியா, எதிரியகா தியைஅரியா, நிருமலராய், அருவினராய், நிலவுவர்,சோ தியினிடையே' | | | -யா. கா. 22 மே. | | | எனவும், | அகவல் துள்ளல்: | | `செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினஆழி, முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய், எல்லைநீள் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல், மல்லல்ஓங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே' | | | - யா. கா. 11 மே. | | | எனவும், | பிரிந்திசைத் துள்ளல்: | | குடநிலைத் தண்புறவில் கோவலர் எடுத்தார்ப்ப, தடநிலைப் பெருந்தொழுவில் தகைஏறு மரம்பாய்ந்து, வீங்குமணிக் கயிறெரீஇத் தாங்குவனத்து ஏறப்போய்க் | | | | | | | | |
|
|