பக்கம் எண் :

செய்யுளியல் - நூற்பா எண் 27

155

 
  கலையினொடு முயல்இரிய, கடிமுல்லை முறுவலிப்ப,
     என ஆங்கு
ஆனொடு புல்லிப் பெரும்புதல் முனையும்
கானுடைத்து; அவர்தேர் சென்ற ஆறே.'
 
 

-யா. கா. 22 மே.

 
எனவும் முறையே காண்க.

     `விளைந்து' என்ற மிகையானே, ஒருசார் கொச்சகக் கலிப்பாக் கலி அடியானே
இறுதலும் கொள்க. இருவகைச் சுரிதகத்தானும் கலியானும் இருமாறு இனிக் காட்டும்
கலிப்பாக்களுள் கண்டுகொள்க.
  `துள்ளல் ஓசை கலிஎன மொழிப.'  
 

 - தொ. பொ. 395

 
  `பிறிதின் நடப்பினும் வஞ்சியும் கலியும்
இறுதி மருங்கின் ஆசிரி யம்மே
கலியே வெண்பா ஆயினும் வரையார்'.

`வகுத்த உறுப்பின் வழுவுதல் இன்றி
எடுத்துயர் துள்ளல் இசையன ஆகல்
கலிச்சொற் பொருளெனக் கண்டிசி னோரே.'
 
 

-காக்கை

 
  `ஆய்ந்த உறுப்பின் அகவுதல் இன்றி
ஏய்ந்த துள்ளல் இசையது கலியே.'
 
 

 - அவிநயம்

 
  `சீரின் கிளந்த தன்தளை தழுவி
நேர்ஈற்று இயற்சீர் சேரா தாகித்
துள்ளல் ஓசையின் தள்ளா தாகி
ஓதப் பட்ட உறுப்புவேறு பலவாய்
ஏதம் இல்லன் கலிஎனப் படுமே.'

 

 

- மயேச்சுரம்

 
             முழுதும்

 

 

- யா. வி. 78

 
  `அளவடி யாய்த்துளல் அமைந்து வருவது
கலியாம் என்மனார் கற்றுணர்ந் தோரே,'

 

 

- மு வீ. யா.செ. 34

 
  ` துள்ளல் ஏந்திசை பிரிந்திசை அகவல்
எனமூ வகைப்படும் என்மனார் புலவர்.'

 

 

44

 
  `ஏந்திசைத் துள்ளல் இயையின் கலித்தளை'

 

 

45