செய்யுளியல் - நூற்பா எண் 28 | 157 | | | `நேரிசை அம்போ தரங்கம் வண்ணகமென்று ஓதிய மூன்றே ஒத்தா ழிசைக்கலி,' | | | - யா,வி, 82 | | | | `வெண்கலி ஒன்றே கொச்சகம் ஐந்தெனப் பண்பறி புலவர் பகுத்துரைத் தனரே.' `கலிஒலி துள்ளல் கலித்தளை பிறவும் வெண்சீர் பிறவும் விரவிய அளவடி தன்னான் நடக்கும் தன்மைத் தாகி, ஒத்தாழிசை மூன்று, ஓரைங் கொச்சகம், வெண்கலி, கலிவெண்பா, விகற்பம் ஈரைந்தே.' | | | - தொ. வி. 227 | | | 28 | கலிப்பா வகையின் இலக்கணம் | 738. | தரவுஒன் றாகித் தாழிசை மூன்றாய்த் தனிச்சொல் இடைநடந்து சுரிதகம் தழுவி நிகழ்வது நேரிசை ஒத்தா ழிசையும், ஆங்கதன் இடையே அளவடி சிந்தடி பாங்கமை குறளடி படுநீர்த் திரைபோல் ஓய்ந்துய்ந்து உற்றிடு மாயின் அன்ன அம்போ தரங்க ஒத்தா ழிசையும், அசையடி மிசைத்தாய் அராகம் அவற்றொடும் இசைவுறின் வண்ணக ஒத்தா ழிசையும், வேற்றுத்தளை தட்டும் வெண்பா இயைந்தும் ஈற்றடி முச்சீ ராயிறின் முறையே வெண்கலிப் பாவும், கலிவெண் பாவும், தரவே தரவிணை தாழிசை சிலபல மரபான் இயன்றவும் மயங்கிவந் தனவும் அவ்வப் பெயரான் அமைந்தகொச் சகமும், ஆகும் என்ப அறிந்திசி னோரே. | | | - தொ. பொ. 395 | | | இது மேற்கூறிய கலிப்பாக்கள் ஆமாறு கூறுகின்றது. | |
|
|
|