|
| ஈற்றடி முச்சீராய் அமைவது கலிவெண்பா; ஒரே தரவு மட்டும் சுரிதகம் பெற்றும் பெறாமலும் வருவது தரவுக் கொச்சகக்கலிப்பா; இரு தரவு இணைந்து வருவது தரவிணைக் கொச்சகக்கலிப்பா; இடைஇடையே தனிச் சொல் பெற்றுத் தரவு தாழிசை தனிச்சொல் சுரிதகம் என்ற உறுப்புக்களோடு வருவது சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா; இடையிடையே தனிச்சொல் பெற்றுத் தரவு ஒன்று, மூன்றுக்குமேல் ஆறுவரை அமைந்த தாழிசை, தனிச்சொல், சுரிதகம் இவற்றை உறுப்புக்களாகப் பெற்றுவருவது பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா; தரவு தாழிசை அராகம் தனிச் சொல் முதலிய உறுப்புக்கள் பிறழ்ந்தும் மயங்கியும் வர அமைவது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா ஆகும் - என்பது. | | |
739 | சீர்ஒத்த இரண்டு முதலிய பல அடிகளை உடையதாய்க் கடைஅடி நீண்டு வருவது கலித்தாழிசை; நெடிலடி நான்காய் அளவு ஒத்துமுடிவது கலித்துறை; அளவடி நான்காய் அளவு ஒத்துமுடிவது கலி விருத்தம் ஆகும் - என்பது. | 30 | |
740 | வஞ்சிப்பா தூங்கல் ஓசையை உடையது; அது குறளடியானும் சிந்தடியானும் அமைந்து தனிச் சொல் பெற்று ஆசிரியச் சுரிதத்தான் முடியும் என்பது. | 31 | |
741 | குறளடிகள் நான்கு ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கி வருவன வஞ்சித்தாழிசை; குறளடிகள் நான்கு தனித்து வருவது வஞ்சித்துறை. சிந்தடி நான்காய் ஒத்து நடப்பது வஞ்சிவிருத்தம் ஆகும் - என்பது. | 32 | |