18 | இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் | | | 746 | வெண்பாவின் சிறுமை மூன்றடி; பெருமை பன்னிரண்டு அடி; ஆசிரியப்பாவின் சிறுமை மூன்றடி; பெருமை ஆயிரம் அடி; வஞ்சிப்பாவின் சிறுமை மூன்றடி; பெருமை ஆயிரம் அடி; கலிப்பாவின் சிறுமை நான்கடி; பெருமை முடிவிலது - என்பது. | 37 | | 747 | வண்ணக ஒத்தாழிசைக்கலிக்கும் அம்போதரங்க ஒத்தாழிசைக்கலிக்கும் தரவு ஆறடி; ஏனைய கலிப்பாக்களின் தரவிற்குச் சிறுமை மூன்றடி; பெருமை பொருளின் முடிபை ஒட்டி அமைவது. தாழிசைக்குச் சிறுமை இரண்டடி; பெருமை நான்கடி; தாழிசை தரவை விடச் சுருங்கி வருவதாகும். அராகத்திற்குச் சிறுமை நான்கடி பெருமை எட்டடி; அஃது அளவடி முதலாக அனைத்து அடியானும் வருதல் கூடும் - என்பது. | 38 | | 748 | வருக்க எதுகை, நெடில் எதுகை, இன எதுகை, வருக்க மோனை, நெடில்மோனை, இன மோனை, உயிர் எதுகை, ஆசு எதுகை, இடையிட்ட எதுகை, மூன்றாம் எழுத்து ஒன்று எதுகை, கடை, கடையிணை, பின், கடைக் கூழை, இடைப்புணர் என்ற தொடை விகற்பங்கள் ஆகியவை இவை - என்பது | 39 | | 749 | வழிபடு தெய்வம் நும்மைக் காக்கப் பழிதீர் செல்வத்தொடு வழிவழி சிறந்து பொலிக என்று கூறும் புறநிலை வாழ்த்து, ஒருதலைக் காமமாகிய கைக்கிளை, வேம்பும் கடுவும் போல முன்னர்த் தோன்றிப் பின்னர் நன்மை பயக்கும் வாயுறை வாழ்த்து, சான்றோரிடம் அடங்கி நடத்தல் வேண்டும் என்று குறிப்பிடும் செவி அறிவுறூஉ ஆகிய பொருண்மைகளில் வெண்பா முதல் பகுதியாகவும் ஆசிரியப்பா பிற்பகுதியாகவும் கொண்டு அமையும் மருட்பா இயற்றப்படும் என்பது. | 40 | | | |
|
|