| |
| | `எவ்விடத்தில் எப்பொருளும் ஒருங்குண்ண இருக்கும்நீ வெவ்விடத்தை எடுத்தமுது செய்ததுமோர் வியப்பாமோ?' `எண்பயிலா உலகடங்க ஒருநொடியில் எரித்திடும்நீ விண்பயிலும் எயில்மூன்றும் எரித்ததும்ஓர் வீறாமே?' `பெருவெள்ளப் பகிரண்டம் தரித்திடுநீ பெயர்த்துமலை பொருவெள்ளப் புனற்கங்கை தரித்ததுமோர் புகழாமே?' `மாயையினா லனைத்துலகும் மயக்கும்நீ மாமுனிவர் சேயிழையார் சிலர்தம்மை மயக்கியதோர் சிறப்பாமே?' `மேதக்க புவனங்கள் தொலைத்திடும்நீ வெகுண்டாய்போல் மாதக்கன் பெருவேள்வி தொலைத்ததுமோர் வன்மையே?' `ஓருருவாய் நிறைந்தநீ இருவர்க்கன் றுணர்வரிய பேருருஒன் றுடையையாய் நின்றதுமோர் பெருமையே.' | | | | [இவை ஆறும் தாழிசை] | | |
| | `அறிவினில் அறிபவர் அறிவதை அலதொரு குறியினில் அறிவுறு குறியி னையலை;' `உளவயின் உளஅளவு உணர்வதை அலதுஉரை அளவையின் அளவிடும் அளவி னையலை;' `அருவெனின் உருவமும் உளை,உரு எனின்அரு உருவமும் உளை,அவை உபய மும்அலை' `இலதெனின் உளது,உளது எனின்இலது, இலதுஉளது அலதுஎனின் நினதுஉரு அறிப வர்எவர்?' | | | | [இவை நான்கும் அராகம்] | | |
| | `எத்தொழிலும் கரணங்கள் இறந்தநினக் கிலை,ஐந்து மெய்த்தொழில்செய் வதுமடிகேள் விளையாட்டு நிமித்தமே!' `சீராட்டு நினக்கிலைஅச் சீராட்டுஞ் சிறுமருங்குல் பேராட்டி விளையாட்டுன் பெயர்த்தாகி நடந்ததே!' `மெய்த்துயர முயிர்க்கெய்தும் விளையாட்டும், உலகீன்ற அத்திருவுக் கிலை;யதுவும் அவர்பொருட்டே யாமன்றே.' | | | | | | |
| பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பாவிற்குச் செய்யுள் : |
| | `ஒருநோக்கம் பகல்செய்ய, ஒருநோக்கம் இருள்செய்ய, இருநோக்கில் தொழில்செய்தும், துயில்செய்தும் இளைத்துயிர்கள் கருநோக்கா வகைகருணைக் கண்ணோக்கம் செயுஞானத் திருநோக்க அருள்நோக்கம் இருநோக்கும் செயச்செய்து, மருநோக்கும் பொழில்தில்லை மணிமன்றுள் நடஞ்செய்வோய்.' | | | | [தரவு] | | |
| |