|
|
750 | விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் கொண்டு அடி ஒத்து வரும் இரண்டடிப் பாடல் வெண் செந்துறை ஆகும்; இரண்டடியாய் ஈற்றடி குறைந்து வருவனவும், விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையும் இன்றிவரும் இரண்டடியான் ஆய செந்துறைப் பாட்டின் சிதைவும் தளை தட்டிவரும் குறள்வெண்பாச் சிதைவும் குறள் தாழிசை ஆகும் - என்பது. | 41 | |
751 | அடிமுதற்கண் பொருளோடு வரும் தனிச்சீர் கூன் எனப்படும்; அது வஞ்சிப்பாவினுள் இறுதியிலும் வரும் - என்பது. | 42 | |
752 | அசை சீர் அடிகள் என்பனவற்றைப் பொருள் இயைபு கொண்டு நோக்காது ஓசையையே அடிப்படையாகக் கொண்டு பிரித்து அலகிடுவது வகையுளி ஆகும் என்பது. | 43 | |
753 | வாழ்த்தின்வகைகளாவன - மெய்வாழ்த்து இருபுற வாழ்த்து, வசையின்வகைகளாவன - மெய்வசை இருபுறவசை - என்பது. | 44 | |
754 | அம்மை அழகு தொன்மை தோல் விருந்து இயைபு புலன் இழைபு என வனப்பு எண் வகைப்படும். அவற்றுள் அம்மையாவது, சில அடிகளாகிச் சிலவாகிய மெல்லிய சொற்களால் ஒள்ளிய பொருளைக் குறிப்பதாகும்; அழகாவது செய்யுட் சொற்களால் இன்னாசையோடு தொடுக்கப்படுவதாகும்; தொன்மையாவது பழைய நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு பாடப்படுவது; தோலாவது மெல்லிய சொற்களால் விழுமிய கருத்துக்களை நுவலும் பல பாடல்களின் தொகுதியும், நீண்டதொரு பாடலின் அமைப்பும் என இருவகைப்படுவது; விருந்தாவது | 45 | |
|
|
|