| இடைநிலை வெண்பாச் சிலபல சேர்ந்து மற்றும் பிறபிற ஒப்புறுப்பு இல்லன கொச்சகம் என்னும் குறியின ஆகும்.' | | | - காக்கை | | |
| `தரவே தரவிணை தாழிசை தாமும் சிலவும் பலவும் சிறந்தும் மயங்கியும் மற்றும் விகற்பம் பலவாய் வருநவும் கொச்சகம் என்னும் குறியின ஆகும்.' | | | - யா. வி. 86 | | |
| `தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொல் சுரிதகமாய் நிரல்ஒன்றின் நேரிசை ஒத்தாழிசைக்கலி; நீர்த்திரைபோல் மரபொன்று நேரடிமுச்சீர் குறள்நடுவே மடுப்பின், அரவொன்று மல்குல்! அம்போ தரங்கஒத் தாழிசையே.' | | | - யா. கா. 31 | | |
| `அசையடி முன்னர் அராகம்வந் தெல்லா வுறுப்புமுண்டேல் வசையறு வண்ணக ஒத்தாழிசைக்கலி; வான்தளைதட்டு இசைதனதாகியும் வெண்பா இயைந்துபின், பால்மொழியாய்! விசையறு சிந்தடி யாலிறு மாய்விடின், வெண்கலியே.' | | | - 32 | | |
| `தரவே தரவிணை தாழிசை தாமும் சிலபலவாய் மரபே இயன்றும் மயங்கியும் வந்தன...கொச்சகமே.' | | | - 33 | | |
| `தரவொடு தாழிசை சுற்றும் அராகமம் போதரங்கம் உரவுடை நற்றனி வாரமென் றாங்கலி; ஓர்ந்ததனை வரவிசை நேரிசை அம்போ தரங்கம்பின் வண்ணகமே விரவிய கொச்சகம் வெண்கலி என்று விகற்பிப்பரே.' | | | - வீ. சோ. 116 | | |
| `வண்ணக ஒத்தா ழிசைக்கா றுறுப்பென்பர்; ஐந்துறுப்பு நண்ணுவ தம்போ தரங்கவொத் தாழிசை; நான்குறுப்பாம் எண்ணிய நேரிசை ஒத்தா ழிசைதான்; இறுதிசிந்தாய்த் திண்ணிய நேரடி யால்வரும் வெண்கலி; தேமொழியே.' | | | - வீ. சோ. 117 | | |