|
| `நிலவும் தரவுந் தரவிணை யும்நின்ற தாழிசைகள் சிலவும் பலவும் சிறந்தும் மயங்கியும் சீர்விகற்பம் பலவும் வரினும், பவளமும் சேலும் பனிமுல்லையும் குலவும் திருமுகத்தாய்! கொண்டவான்பெயர் கொச்சகமே.' | | | - வீ. சோ. 118 | | |
| `கலிமுதல் உறுப்பாம் தரவுதா ழிசையே துணைஉறுப்பு எனக்கூன் சுரிதகம் வண்ணகம் அம்போ தரங்கம் ஆம்இவை நான்கே.' | | | - தொ. வி. 238 | | |
| `தரவு தாழிசை தன்தளை வெண்டளை இரண்டுஉறழ்ந் தனஅடி இரண்டும் பலவுமாம்.' | | | - தொ. வி. 229 | | |
| `வண்ணகம் அளவடி வரைமுதல் பலவடி நான்குஆதி எட்டுஈறாய் நடைமுடுகு அராகமாம்.' | | | - தொ. வி. 230 | | |
| `அம்போ தரங்கம் அம்புஅளாம் திரைபோல் அளவடி ஈரடி இரண்டும் பேரெண் அளவடி ஓரடி நான்கும் அளவெண் சிந்தடி ஓரடி எட்டும் இடையெண் குறளடி ஓரடி நானான்கும் சிற்றெண் எட்டும் நானான்கும் நான்கும் எட்டுமாய்ச் சுருங்கவும் அந்நால் துணைஉறுப்பு உடைத்தே.' | | | - தொ. வி. 231 | | |
| `சுரிதகம் என்ப சுரிந்தெனக் கூனின் பின்அகவல் வெள்ளை யாக முடிவதே.' | | | - தொ. வி. 232 | | |
| `நேரிசை அம்போ தரங்கம் வண்ணகம் என்றுஒத் தாழிசை இவைமூன்று; இவற்றினுள் தரவுஒன்று ஒருமுத் தாழிசை தனிநிலை சுரிதகம் எனநால் துணைவரு நேரிசை; தாழிசைக் கீழ்அம் போதரங்கம் சாரவும் அம்போ தரங்கம்மேல் அராகம் அணையவும் அம்போ தரங்கமே ஆம்,வண் ணகமாம்.' | | | - தொ. வி. 233 | | |
|